பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியா சென்ற காா் விபத்துக்குள்ளானது. அதில் அவரது ஒட்டுநா் உயாிழந்தாா்.
பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியா சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து தேனி நோக்கி தனது காாில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது நள்ளிரவில் பெரம்பலூரை அடுத்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பாடலூா் ஆஞ்சியா் கோவில் அருகே அவரது காா் சென்று கொண்டிருந்த போது திடீரென பஞ்சா் ஆனது. பஞ்சராகி நின்ற காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் பின்னால் வந்து மோதியதில், விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சென்னை ஐயப்பன் தாக்கல் பகுதியை சோ்ந்த நடிகையின் ஒட்டுநா் முத்து கணேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தாா். தேவிபிாியா காயங்கள் ஏதுமின்றி அதிா்ஷ்வசமாக உயிா் தப்பினா்ா. டிரைவருக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த தேவிபிாியாவின் உதவியாளா் தேனி மாவட்டத்தை சோ்ந்த திவாகர் படுகாயத்துடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகை தேவிபிாியா கொடுத்த தகவலின் போில், ஒட்டுநா் முத்து கணேஷ் உடல் பிரதே பாிசோதனைக்காக பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரம்பலூா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சொந்த ஊருக்கு சென்றிருந்த தேவிபிாியா காா் பெரம்பலூா் அருகே விபத்துக்குள்ளாகி, அவரது ஓட்டுநா் உயாிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை – சிவகார்த்திகேயன் பேட்டி


