நடிகர் ஜான் கொக்கேன் தான் அப்பா ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜான் கொக்கேன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சர்பட்டா பரம்பரை படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்தப் படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் ஜான் மிரட்டியிருந்தார். கடைசியாக அஜித்தின் துணிவு படத்திலும் வில்லனாக மிரட்டியிருந்தார்.

ஜான் கொக்கேன் மாடல் நடிகை பூஜா ராமசந்திரனை திருமணம் செய்தார். பூஜா விஜே க்ரெய்க்கை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதையடுத்து ஜான் கொக்கேனுடன் திருமணம் நடந்தது. இவரும் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.
சில மாதங்களுக்கு முன்பு பூஜா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இந்நிலையில் ஜான் பூஜா ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மற்றும் பூஜா கரங்களை பிடித்தவாறு புகைப்படம் வெளியிட்டு ஜான் இதை தெரிவித்துள்ளார். இதையடுத்து புது பெற்றோருக்கு பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram