Homeசெய்திகள்சென்னைஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம்!

ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம்!

-

- Advertisement -

விஜய் தனது பிரசாரத்தை மார்ச் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளாா். ஒரு நாளில் 5 தொகுதிகளைில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம்!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளார். அதன்படி, நாளை மறுநாள் மார்ச் 28ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுதியல் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

we-r-hiring

இந்த பிரச்சாரத்திற்காக, தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரே நாளில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சார அட்டவணை,

  1. 28 ஆம் தேதி காலை 10 மணி பெரம்பூர் MKB நகர்.
  2. நண்பகல் 1 மணி கொளத்தூர்
  3. வில்லிவாக்கம் 2 மணி
  4. அண்ணா நகர் 3 மணி
  5. விருகம்பாக்கம் 4 மணி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

ஒரே நாளில் 5 சட்டமன்ற தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என கணக்கிட்டு, அதற்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.

”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…

MUST READ