Homeசெய்திகள்தமிழ்நாடு”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…

”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…

-

- Advertisement -

நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால் கைதட்டல் வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் ஓட்டுவிழாது என நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் வி சேகர் விமர்சித்துள்ளாா்.”விஜய்யின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…

திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகர் செய்தியாளர்களை சந்தித்தாா்.

we-r-hiring

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் அவர் கணித்தார். மேலும், தேர்தல் முடிந்ததும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தும் எனவும் குற்றம்சாட்டினார்.

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். “சினிமாவில் எழுதிக் கொடுக்கப்படும் வசனங்களை மேடையில் பேசுவதால் கைதட்டல் கிடைக்கலாம்; ஆனால் அது ஓட்டுகளாக மாறாது” என்று குறிப்பிட்டார். சினிமா மற்றும் அரசியல் இரண்டும் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும், நடிகர்களை திரையில் மட்டும் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

அதேபோல், இப்தார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சிலர் நடைமுறையில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளாா். மேலும், அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வுகள் குறித்து பேசும்போது, சில கட்சிகள் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் வகையில் ஓட்டுகளைப் பிளக்கும் எனவும் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், அந்தக் கட்சி பாறாங்கல்லைப் போன்றது; அதைச் சார்ந்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கே பாதிப்பு ஏற்படும் என்றார். மேலும், பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறுவது பாஜக ஆளும் மாநிலங்களில் தான் என குற்றம்சாட்டினார்.

பொது வாழ்க்கை குறித்து பேசும்போது, கல்வியைவிட ஒழுக்கமும் கலாசாரமும் முக்கியம் என வலியுறுத்திய அவர், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மதிப்புணர்வு கற்பிக்க வேண்டும் என்றார். சட்டம்-ஒழுங்கு குறித்து பேசும்போது, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என்றும் தெரிவித்துள்ளாா்.

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

MUST READ