Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு…வதந்திகளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் உறுதி

தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு…வதந்திகளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் உறுதி

-

- Advertisement -

தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு…வதந்திகளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் உறுதி

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் (TNPDA) உறுதிப்படுத்துகிறது என அச்சங்கத்தின் தலைவர் K. P. முரளி  உறுதியளித்துள்ளாா்.

we-r-hiring

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ​பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL மற்றும் HPCL ஆகியவை அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் (Retail Outlets) தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்து வருகின்றன.

​தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், ​சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

​தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அவசரமாகத் தேவைக்கு அதிகமாக எரிபொருள் நிரப்புவதைத் (Panic Buying) தவிர்க்க வேண்டும். உங்கள் அன்றாடத் தேவைக்கு ஏற்ப வழக்கம் போல எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.

​பொதுமக்களுக்குத் தடையற்ற மற்றும் நம்பகமான எரிபொருளை வழங்க எங்களின் அனைத்து டீலர்களும், எண்ணெய் நிறுவனங்களும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் தலைவர் K. P. முரளி  தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாடு: 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடல்!

MUST READ