Homeசெய்திகள்தமிழ்நாடு"விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்.." - டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான நடிகை ரஞ்சனா நாச்சியார், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது சமூக வலைத்தள விங் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்."விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்.." - டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் மகளிர் தின விழாவில் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஞ்சனா நாச்சியார், தவெக-விலிருந்து விலகி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ரஞ்சனா நாச்சியாரின் குற்றச்சாட்டுகள்:

we-r-hiring

புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது:

“நான் தவெக-விலிருந்து விலகியது முதல் சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராகத் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆபாசமான வார்த்தைகளால் பேசுவது மற்றும் எனது புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து (Morphed photos) பரப்புவது போன்ற டிஜிட்டல் அப்யூஸ் (Digital Abuse) செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.”

“குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தையே தங்களது அடையாளமாக (Profile Picture) வைத்துக்கொண்டு இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்கின்றனர். விஜய்யின் பெயரைக் கெடுக்கும் வகையில் இவர்களின் செயல்பாடு உள்ளது.”

“இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்ற குழு இருப்பதாகவும், இதனை ஆதவ் அர்ஜுனா என்பவருக்குச் சொந்தமான நிறுவனம் இயக்கி வருவதாகவும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனை ஆதாரங்களுடன் டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளேன்.”

​தன்னைத் தொடர்ந்து மிரட்டி வரும் நபர்கள் மீதும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் சமூக வலைத்தளக் குழுக்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எரிபொருள் லாக்டவுனை விட தவெக மிகப்பெரிய ஆபத்து எனவும் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், நேற்று விஜய் கொடுத்த புகார் பெண்கள் ஓட்டு பாதிக்கும் என்பதற்கான விஜய் நடத்திய நாடகம் எனவும விமர்சித்தார்.

​இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள்” – ரஞ்சனா நாச்சியார் ஆவேசம்!

 

MUST READ