HomeBreaking Newsதமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

​தமிழக தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் (G.O.Ms.No.239, நாள்: 26.03.2026), இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை தடையின்றி ஆற்றுவதற்காக, 1881-ஆம் ஆண்டு ‘மாற்றுச் சீட்டு சட்டத்தின்’ (Negotiable Instruments Act, 1881) கீழ் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

இந்த அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று:
​தமிழக அரசு அலுவலகங்கள்.
​அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள்.
​பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.
​கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகள்.
​தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

​தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசிதழிலும் (Gazette) வெளியிடப்பட உள்ளது.

பணப்பட்டுவாடா தடுப்பு: தேர்தல் அதிகாரி ஜவகர் விரிவான பேட்டி

MUST READ