Homeசெய்திகள்அரசியல்பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

-

- Advertisement -

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி, “பாமகவுடையது வளர்ச்சிகான தேர்தல் அறிக்கை; தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் பாமக தேர்தல் அறிக்கையின் அடிப்படை; போதையில்லா தமிழகம் படைப்பதே பாமகவின் முதன்மையான நோக்கம்.

  • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  • நீட் தேர்வு விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.
  • மகளிர் உரிமைத் தொகை எந்த நிபந்தனையும் இன்றி அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும்.
  • பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம்.
  • நகர்ப்புறங்களில் பணியாற்றும் ஏழை தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் உணவுத் திட்டம்
  • 10 ரூபாய்க்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொரியல், ஊறுகாய் என நிறைவான மதிய உணவு வழங்கப்படும். ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும்.
  • ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அரசு மற்றும் தனியார் நாடு துறைகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • பட்டப்படிப்பு முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.
  • பட்ஜெட்டில் 25% வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கப்படும்.
  • குறுகிய கால மற்றும் மத்திய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும்
  • பயிர்க்கடன், கல்விக்கடன் தள்ளுபடி.
  • தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு.
  • 100 நாள் வேலைத் திட்டம்,150 நாட்களாகும்; அது வேளாண் பணிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பு.
  • 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி போன்ற தோ்தல் அறிக்கைகளை பாமக தலைவா் ராமதாஸ் வெளியிட்டாா்.

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

we-r-hiring

 

MUST READ