Homeசெய்திகள்உலகம்ஓமனுடன் இணையும் ஈரான் - ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்

ஓமனுடன் இணையும் ஈரான் – ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்

-

- Advertisement -

தற்போதைய போர் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், போருக்கு முந்தைய அமைதிக்கால விதிகளைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.ஓமனுடன் இணையும் ஈரான் - ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம் ​​உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில், ஓமன் நாட்டுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஈரான் முடிவு செய்துள்ளது.​ மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதல்கள் காரணமாக இந்தப் பகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.​ இப்பகுதியில் நடக்கும் கப்பல் போக்குவரத்து மற்றும் அந்நிய நாடுகளின் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதே ஈரானின் முதன்மை நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

​ஹார்முஸ் நீரிணை என்பது உலகப் பொருளாதாரத்தின் “இதயத் துடிப்பு” போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இந்த வழியில் நடைபெறுகிறது. பாரசீக வளைகுடாவையும் ஓமன் வலைகுடாவையும் இணைக்கும் வழித்தடமாகவும் இருந்து வருகிறது. இந்த வழித்தடம் ஒரு நாள் மூடப்பட்டாலும் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் எரிப்பொருள்களின் விலை கடுமையாக உயரும்.

we-r-hiring

இதுகுறித்து ​ஈரான் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், போருக்கு முந்தைய விதிமுறைகள், நடவடிக்கைகள் எதுவும் தற்போது செல்லாது என்று அழுத்தமாக கூறுகிறது. அதாவது போர் காலத்திற்கு முந்தைய  (Pre-war rules) இனி எதிர்பார்க்க முடியாது”. அதாவது, இப்பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இருப்பதை ஈரான் இனி அனுமதிக்காது என்பதையே இது குறிக்கிறது.

​வெளிநாட்டு சக்திகளின் உதவி இன்றி, ஓமன் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்தே இப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என ஈரான் நம்புகிறது. ​இஸ்ரேல் அல்லது பிற நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஹார்முஸ் நீரிணையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தவும் ஈரான் தயங்காது என்ற எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது.

​இந்த நடவடிக்கை சர்வதேச நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தனது கட்டுப்பாட்டை மேலும் அதிகரிப்பது, உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் (Global Supply Chain) பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

5 வாரத்தை கடந்த ஈரான் போர் – அமெரிக்க ராணுவத் தளபதியின் திடீர் பதவி நீக்கத்தின் பின்னணி?

MUST READ