Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு

-

- Advertisement -

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த் (Stealth) போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்து போர் சூழலை சூடுபடுத்தி உள்ளது.அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்புஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை ரகசிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தகர்த்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள வான்பரப்பில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) வான்வெளிப் பிரிவு, ஒரு புதிய வகை வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. வீழ்த்தப்பட்ட விமானம் இங்கிலாந்தின் ‘லேக்கன்ஹீத்’ (Lakenheath) தளத்தைச் சேர்ந்த படைப்பிரிவைச் சார்ந்தது என ஈரான் அடையாளப்படுத்தியுள்ளது.

we-r-hiring

​ஏவுகணை தாக்கியவுடன் விமானம் வெடித்துச் சிதறியதால், அதில் இருந்த விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12 மணி நேரத்திற்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது அமெரிக்க விமானம் இது என்று ஈரான் மார்புதட்டிச் சொல்கிறது. முன்னதாக மார்ச் மாத இறுதியில் ஒரு F-35 விமானம் ஈரானின் தாக்குதலால் அவசர தரையிறக்கம் செய்ததாக செய்திகள் வந்தன.

​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய கருத்துக்களுக்கு ஈரான் ராணுவம் அளிக்கும் முதல் பதிலடி இது என்று IRGC குறிப்பிட்டுள்ளது.​ ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பொதுவாக இத்தகைய இழப்புகளை அமெரிக்கா உடனடியாக ஏற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் “வீழ்த்த முடியாத” போர் விமானம் என்று கருதப்படும் F-35 ஐ சுட்டு வீழ்த்தியதன் மூலம், தனது வான் பாதுகாப்புத் திறனை உலகிற்கு நிரூபிக்க ஈரான் முயல்கிறது என்று கூறலாம்.

ஓமனுடன் இணையும் ஈரான் – ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்

MUST READ