இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான புதிய தலைவராக (Executive Director and State Head) V.C. அசோகன் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல்பாடுகள், சந்தைப்படுத்துதல் மற்றும் பிற முக்கியத் திட்டங்களை முன்னின்று நடத்துவார்.
V.C. அசோகன் எரிசக்தி துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு அவர் கேரள மாநிலத் தலைவராகவும், பல்வேறு உயர் பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான சந்தையான தமிழ்நாட்டில், எரிபொருள் விநியோகம், எல்பிஜி (LPG) மற்றும் புதிய எரிசக்தி திட்டங்களை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்பு முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கியப் பங்காற்றி வரும் நிலையில், இவரது நியமனம் குறிப்பிடத்தக்கது.
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
