நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.
ரீட் வைஸ்மேன் (Reid Wiseman): இந்தத் திட்டத்தின் தளபதி (Commander).

விக்டர் குளோவர் (Victor Glover): நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் கறுப்பின வீரர்.
கிறிஸ்டினா கோக் (Christina Koch): நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் பெண் விண்வெளி வீரர்.
ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen): நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் கனடா நாட்டு விண்வெளி வீரர்.
பயணத்தின் முக்கிய அம்சங்கள்:
ஏப்ரல் 1, 2026 அன்று கிளம்பி, 10 நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்துவிட்டு ஏப்ரல் 10 அன்று பூமிக்குத் திரும்பினர். பூமியில் இருந்து சுமார் 4,06,778 கி.மீ தொலைவு வரை பயணித்தனர். இது 1970-ல் ‘அப்பல்லோ 13’ படைத்த சாதனையை விட அதிகம். இவா்கள் அனைவரும் நிலவில் தரை இறங்கவில்லை. ஆனால், நிலவைச் சுற்றி வந்து (Lunar Flyby), விண்கலத்தின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளைச் சோதித்தனர். இந்த வெற்றியின் மூலம், அடுத்து வரும் ‘ஆர்டெமிஸ்-3’ திட்டத்தில் மனிதர்களை நிலவில் தரை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
”இது வெறும் பயணத்தின் முடிவு அல்ல, மனிதகுலம் நிலவில் தளம் அமைத்து ஆய்வு செய்யப்போகும் ஒரு புதிய யுகத்தின் தொடக்கம்” என்று நாசா இந்த வெற்றியைக் கொண்டாடுகிறது.
பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்
