Homeசெய்திகள்தமிழ்நாடுCBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…

CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…

-

- Advertisement -

2026-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ (CBSE) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…

we-r-hiring

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ நடத்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை CBSE Results Portal (results.cbse.nic.in) என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து, தனிப்பட்ட தேர்வு முடிவுகளை எளிதாகப் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, இந்தியா முழுவதும் சுமார் 33 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொண்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த உற்சாகத்துடன் மதிப்பெண்களைச் சரிபார்த்து வருகின்றனர். தொடர்ந்து, மேல்நிலைக் கல்விக்கான சேர்க்கை செயல்முறைகள் விரைவில் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மே-ஜூன் மாதங்களில் இரண்டாம் கட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

”தொகுதி மறுசீரமைப்பு” – அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கை – செல்வப்பெருந்தகை கண்டனம்…

MUST READ