Homeசெய்திகள்உலகம்கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்காவின் அதிரடி...

கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்காவின் அதிரடி முடிவு

-

- Advertisement -

வாஷிங்டன்: அமெரிக்கா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு இந்தியாவின் எரிசக்தி தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்காவின் அதிரடி முடிவு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதித்திருந்த நிலையில், இந்த அனுமதியை நீட்டிக்க போவதில்லை என்று அமெரிக்க நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெள்ளை மாளிகையில் அறிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால் மோதல் தீவிரமடைந்த நிலையில், உயர்ந்து வரும் விலைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஈரானிய மற்றும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தடை விலக்கை அமெரிக்கா அனுமதித்திருந்தது.

we-r-hiring

இதனிடையே ரஷ்ய மற்றும் ஈரானிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மீண்டும் தடை விதிக்க முடிவு செய்திருப்பது தடைகளிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் எண்ணெய் விநியோகத்தை அதிகரித்து, உலகளாவிய எரிசக்தி விலைகளின் கடும் உயர்வை மட்டுப்படுத்த டிரம்ப் அரசு மேற்கொண்ட முயற்சிகள் முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கிறது. எண்ணெய் வாங்குவதற்காக அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சலுகையை நீட்டிக்க முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், இந்த முடிவு உலக அரங்கில் பிரட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மார்ச் 11-ஆம் தேதிக்கு முன்பே கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயை வாங்குவதற்காகவே இந்த 30 நாட்கள் தற்காலிக அனுமதி அமெரிக்காவால் வழங்கப்பட்டது என்றும், அந்த காலக்கெடு தற்போது முடிந்துவிட்டது என்றும் ஸ்காட் பெசென்ட் கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கு போர் வெடித்த போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களை தாண்டி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அப்போது விலையை கட்டுக்குள் கொண்டு வரவே இந்தியா போன்ற சில நாடுகளுக்கு அமெரிக்கா, இந்த தற்காலிக சலுகையை வழங்கியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் சுமார் 30 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய்க்கான ஆர்டரை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் கூட மீண்டும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் வாங்க தொடங்கின. இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் இந்த சலுகையை நீட்டிக்க அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்த போதிலும் அமெரிக்கா அந்த கோரிக்கையை நிராகரித்து உள்ளது. முன்னதாக இந்த சலுகை கொடுத்ததற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. உக்ரைன் மீதான போரை தொடர ரஷ்யாவிற்கு நிதியுதவி அளிக்க இந்த சலுகை வழிவகை செய்வதாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக புகார் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், ஈரானிய கச்சா எண்ணெயைத் தொடர்ந்து வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்தியாவைப் பொறுத்தவரை, கடுமையான கட்டுப்பாடுகள் எண்ணெய் இறக்குமதியில் அழுத்தத்தை ஏற்படுத்த கூடும், இருப்பினும் விநியோகம் சீராக இருப்பதாக அரசு கூறுகிறது.

நெருக்கடியில் சென்ற ஈரானின் எண்ணெய் கப்பல் – அதிர்ச்சியில் அமெரிக்கா படைகள்

MUST READ