சென்னை அருகே சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் வானங்களை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் நெடுஞ்சாலை மழைநீர் தேக்கம் அடைந்துள்ளதால் வணிகர்கள் பாதிப்படைவதாகவும், 4 ஆண்டுகளாக பல்வேறு புகார்களை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டுவதாக தெரிவித்து இன்று சித்தாலப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மழைநீர் தேங்கிய இடத்திலேயே வாகனங்களை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மழைநீருடன் கழிவு நீர் கலந்து சாலையிலேயே நிற்பதால் உணவு விடுதிகள், டீ கடைகள், பேக்கரி என பெரும்பாலான கடைகளை நீர் வெளியேறும் வரையில் அடைக்க வேண்டிய சூழல் ஏற்படுள்ளதாகவும் தெரிவித்தனா்.
அதுபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் மழைநீரில் விழுந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழை நீர் வடிகால் கால்வாய்களை முறையாக இனைக்காம விட்டதால் தான் சித்தாலப்பாக்கத்தில் நெடுஞ்சாலையிலே மழைநீர் தேக்கம் அடந்துள்ளதாக ஆர்பட்டத்தின்போது தெரிவித்தனர்.