spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமதுரை, கேம்பர்லி நகரத்தை இணைக்க இங்கிலாந்து மேயர் சென்னை வருகை

மதுரை, கேம்பர்லி நகரத்தை இணைக்க இங்கிலாந்து மேயர் சென்னை வருகை

-

- Advertisement -

பென்னிகுவிக் நினைவாக மதுரை மற்றும் கேம்பர்லி நகரத்தை இணைக்க சென்னை வந்த இங்கிலாந்து மேயர். மதுரையின் கல்வி சுகாதாரம் சுற்றுலா மேம்படும் என பேட்டியளித்துள்ளாா்.மதுரை, கேம்பர்லி நகரத்தை இணைக்க இங்கிலாந்து மேயர் சென்னை வருகைமதுரை மற்றும் இங்கிலாந்து கேம்பர்லி நகரத்தை இணைக்கும் நோக்கில் இங்கிலாந்தில் இருந்து  சர்ரே மாகானம் மேயர் லூயிஸ் ஆஸ்பரி மற்றும் கவுன்சிலர்  ஆலன் ஆஸ்பரி ஆகியோர் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர்,  தமிழகம் மதுரையில் தடுப்பனை கட்டிய பென்னிகுவிக்கை போற்றும் விதமாக இந்த இணைப்பை ஏற்படுத்த உள்ளதாகவும், இதனால் பல நன்மைகள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேட்டியளித்த கேம்பர்லி தமிழ் சங்கத்தின் செயலாளர் சந்திரபிரேலி,  நூறாண்டுகளுக்கும் மேலாக ஜாதி மதங்களை தாண்டி ஜான் பென்னிகுவிக்கை தமிழக மக்கள் போற்றி கொண்டாடி வருவது பெருமையளிப்பதாகவும், அதன் நினைவாக கலாச்சார அடிப்படையில் காசி ராமேஸ்வரம் இணைக்கபட்டது போல் பென்னிகுவிக் நினைவாக மதுரை மற்றும் இங்கிலாந்து கேம்பர்லி நகரத்தை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

we-r-hiring

மேலும் கேம்பர்லி நூலகம் அருங்காட்சியகம் மற்றும் மதுரையிடையே போடப்படும் உடன்படிக்கை மூலமாக மதுரை மக்களின் கல்வி மருத்துவம் சுற்றுலா போன்றவை மேம்படுத்தபடும் என்றும் தெரிவித்தார். அதேபோல் இது தொடர்பாக நாளை முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடியை சும்மா விடமாட்டேன்… ஜெயலலிதா மகள் ஆவேசம்…

MUST READ