spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைடபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

-

- Advertisement -

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சென்னை நந்தம்பாக்கத்தில் அயலக தமிழா்கள் தினவிழாவில் டபுள் டெக்கர் பேருந்து முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1.89 கோடி மதிப்பிலான பேருந்தை முதலமைச்சரிடம் அயலக தமிழா்கள் பரிசளித்தனா். சென்னையில் கலாச்சார கட்டடங்களை பாா்வையிடும் வகையில் இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

பின்னா் பேருந்தில் ஏறி பார்வையிட்டார் முதல்வா். சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை 3 மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும் வா்த்தக மையத்தில் 2வது நாளாக நடைபெற்ற அயலகத் தமிழா் தினவிழாவில் அயலகத் தமிழா்களுக்கு முதல்வரால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சென்னையில் நடைப்பெற்ற அயலகத் தமிழா் தின விழா கொண்டாட்டத்தில் முதல்வா் பங்கேற்று விழா பேரூரையாற்றினாா். உலகின் பல நாடுகளிலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் தமிழா்களாகிய நீங்கள் பல முக்கியப் பொறுப்புகளில் இருப்பதையும், நாம் யாராலும் பிரிக்க முடியாத சொந்தங்கள், இது பல்லாண்டு கால சொந்தம். கடல் நம்மை பிாித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணா்வால் இணைக்கிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.

ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி – கௌதமி பேட்டி…

MUST READ