spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி – கௌதமி பேட்டி…

ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி – கௌதமி பேட்டி…

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகையுமான கௌதமி ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளாா்.ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி – கௌதமி பேட்டி…

அதிமுக சார்பில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது . கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று மூன்றாவது நாளாக நடைபெறும் நேர்காணலில் விருதுநகர் , கடலூர் , நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.

we-r-hiring

இதில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகையுமான கௌதமி  நேர்காணலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பல வருடங்களாக என் மனதில் நெருக்கமாக உள்ள ஊர் ராஜபாளையம் என்றும் அதனால் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்பமனு அளித்ததாகவும் நல்ல முடிவை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதற்கான அத்தனை முயற்சிகளையும் நானும் என்னுடன் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் செய்வார்கள் என்ற உறுதி தனக்கு மீண்டும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அத்தொகுதியில் உள்ள பெண்களோடு இளைஞர்களோடு விவசாயிகளோடும் இத்தனை வருடங்களாக இருந்து கொண்டு வருவதாக கூறினார்.தமிழ்நாடு முழுவதுமே என் ஊர் தான் என்றும் ஏழு வருடங்களுக்கு முன்பாக ராஜபாளையம் என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதால் அத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்ததாக அவர் கூறினார்.

ராஜபாளையம் தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவெடுத்தாலும் சரியாக தான் இருக்கும் என்றார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அறிவுரை என்பது நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்றும் ஒவ்வொருவருக்கான பாதை என்பது அவரவர்க்கு என அமையும் என்றும் அவரவர் ஆலோசனைப்படி அவரவர் பாதை அமையும் என்றும் சினிமாவோ அரசியிலோ இரண்டுமே பொதுவாழ்வில்  கடினமான பாதை தான் என்றார்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல முயற்சி மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றார். அதிமுகவுடைய வாக்குகளை அவரால் அறுவடை செய்ய முடியாது என்றும் விஜயின் அரசியல் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவரது பயணம் தற்போது தான் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். மேலும் ராஜபாளையத்தில் போட்டியிட்டால் தனது வெற்றி 100℅ சதவீதம் வெற்றி என்றார்.

தொடர்ந்து பேசியவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதியவர்களும் வரவேண்டும் என்றும் அதைவிட மக்களுக்கு யார் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்களோ மக்களுக்காக உழைக்கிறார்களோ அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

காங்கிரஸ் போனாலும்… திமுகவுக்கு சிக்கல் இருக்கா? குபேந்திரன் நேர்காணல்!

MUST READ