spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாங்கிரஸ் போனாலும்... திமுகவுக்கு சிக்கல் இருக்கா? குபேந்திரன் நேர்காணல்!

காங்கிரஸ் போனாலும்… திமுகவுக்கு சிக்கல் இருக்கா? குபேந்திரன் நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், திமுக கூட்டணிக்கு உளவியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக – காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் அதிக இடங்களும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடக்கம் முதலே ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போது, தமிழ்நாட்டிற்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி வேண்டும் என்று நான் தலைமையிடம் சொல்லிவிட்டதாக கூறினார்.  அதையும் மீறி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்கள் குரல் எழுப்புகிறார்கள் என்றால்? வேறு நோக்கத்திற்காக யாரோ தூண்டி விடுகிறார்கள் என்று தான் அர்த்தம். அது ராகுல்காந்தி தான்.

திமுகவை பார்த்து தீய சக்தி என்று பேசுகிற விஜயை பார்த்து, ஒரு மாபெரும் அரசியல் சக்தி என்று பிரவீன் சக்ரவர்த்தி சொல்கிறார்.விஜயை சந்தித்தது தவறு இல்லை என்றும் பிரவீன் சக்ரவர்த்தி சொல்கிறார். திமுகவுக்கு ஒரு கட்டத்தில் பெரிய அழுத்தம் கொடுத்து, கூடுதல் இடங்களை பெற காங்கிரஸ் டபுள் கேம் ஆடுகிறது. அகில இந்திய தலைமை அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த கேம் ஆடப்படலாம்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் இடங்கள், 3 அமைச்சர் பதவி கேட்பது தவறு இல்லை. ஆனால் அந்த இடத்திற்கு நீங்கள் கட்சியை வளர்த்துள்ளீர்களா? 10 தொகுதிகளில் தனித்து நின்று காங்கிரசால் வெற்றி பெற முடியும் என அவர்களால் அடையாளம் காண முடியுமா? திமுக தங்களின் தொண்டர்களை உற்சாகமாக வைத்துள்ளது போன்று காங்கிரஸ் வைத்துள்ளதா? காங்கிரசால் சிறுபான்மையினரின் வாக்குகளை திமுக பெறுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள் குறித்து ஸ்டாலினுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுகிறபோது பேசலாம். அதை ஊடங்கள் வாங்கித் தரப்போவது கிடையாது. அதனால் ஊடகங்களிடம் பேச முடியாது. தேர்தலில் 90 முதல் 95 இடங்கள் வந்தால், தாமாகவே கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கலைஞர், ஜெயலலிதா போன்று கூட்டணி ஆட்சி இல்லை என்று திமுக, அதிமுகவால் சொல்ல முடியாது. காங்கிரஸ் வெளிப்படையாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. பாஜக மறைமுகமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. பாஜக குறைந்தபட்சம் 56 இடங்கள், 3 அமைச்சர் பதவி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பாஜக 40 இடங்களிலும், கூட்டணி கட்சிகளுக்கு 16 இடங்களும் தரப்பட உள்ளன. என்னை பொருத்தவரை பாஜகவுக்கு அதிகபட்சமாக 26 இடங்கள் தரப்படலாம். மற்றவர்களுடன் சேர்த்து 40 இடங்கள் தரப்படலாம்.

கடலூர் தேமுதிக மாநாட்டில் பேசிய சுதீஷ், பிரேமலதாவை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆட்சியில் பங்கு தருவதாக சொல்கிற ஒரே கட்சி தவெக தான். நீங்கள் அவர்களுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். காங்கிரஸ் தரப்பில் இருந்து கூட்டணி ஆட்சி குறித்த அழுத்தம் கொடுக்கப்படும் சூழலில் அவர்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் திட்டம் திமுகவிடம் உள்ளதா? என்கிற கேள்வி எழும். ஆனால் திமுக பிளான் பி வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை இருந்து கொண்டே இருக்கிறது. அதை திமுக அறுவடை செய்கிறது.

காங்கிரஸ் இல்லாவிட்டால் திமுகவுக்கு நிச்சயமாக சரிவு. அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது. எனவே காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே போனால், அந்த வாக்குகளை சரிசெய்ய வேறு கட்சிகளை உள்ளே கொண்டுவர திமுகவிடம் திட்டம் உள்ளதா? என்று தெரியவில்லை. ஒரே வைத்திருந்தாலும், அது வெற்றி பெறுமா? திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளியே போனாலும், திமுக கூட்டணிக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்படும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

என்னை பொருத்தவரை ராகுல்காந்தி திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்று நினைக்கிறார்கள். பிரியங்கா, ராகுல்காந்தி ஆகியோரிடம், மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றவர்கள் விஜயுடன் பிரச்சாரத்திற்கு போனால் கேரளா, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கலாம். தமிழ்நாட்டில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். கேரளாவில் இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். புதுச்சேரியில் ஏற்கனவே ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் விஜயை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பது சரியாக இருக்காது. ராகுல்காந்தி ஒருவேளை மாற்றம் செய்து பார்க்கலாம் என நினைக்கிறார் என தோன்றுகிறது. அதற்கான காரணம் தெரியவில்லை.

2019 தேர்தலில் யாரும் அறிவிக்காதபோது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். கோவையில் ஸ்வீட் வாங்கி கொடுத்தது போன்றவை ராகுல்காந்தி – ஸ்டாலின் அன்பை வெளிப்படுத்தின. அத்தகைய அன்பு தற்போது இல்லை என்று தோன்றுகிறது. காரணம் இதுபோன்ற கலகக் குரல்கள் எழத் தேவையில்லை. ராகுல்காந்தி, கடைசி நேரத்தில் ஸ்டாலினுக்கு போன் செய்து, தங்களுக்கு 30 தொகுதிகள் வேண்டும். அங்கு வெற்றி பெறுவதை நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்று கேட்டால் அது உண்மையான சவால். அப்படியான சூழல் தற்போது 2 கூட்டணிகளிலும் உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை.

MUST READ