தினேஷ் கோபால்சாமி கிழக்கு வாசல் சீரியலில் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2010-ல் வெளியான ‘மஹான்’ என்ற நிகழ்ச்சி மூலம் தினேஷ் கோபாலசாமி அறிமுகமானார். அதையடுத்து பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.


‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் பிரபலமான தினேஷ் கோபால்சாமி அதையடுத்து ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் நடித்தார். புது கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2, கார்த்திகை தீபம் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இந்நிலையில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளியாகி வரும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் தொடரில் தினேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
“தினேஷ் கோபால்சாமி இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நல்லவன் பாதி கெட்டவன் பாதி என்ற வகையில் க்ரே ஷேடில் காணப்படுவார். கேங்ஸ்டர் சிவா கதாபாத்திரத்தில் அவர் இந்த சீரியலில் நடிக்கிறார்” சீரியலுக்கு நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.
சீரியலில் நடிப்பது குறித்து தினேஷ் கோபால்சாமி பேசுகையில், “கிழக்குவாசல் என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் எனது இரண்டு சீரியல்களிலும் நான் கதாநாயகனாக நல்லவனாக நடித்தேன். தற்போது கேங்ஸ்டராக நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.


