விஜய் அரசியலும், சிரஞ்சீவி அரசியலும். 2009 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையும், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையும் ஒப்பிடலாம்.
2009 ல் ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சிரஞ்சீவி தொடங்கிய பிரஞ்சா ராஜ்யம் கட்சி என்று மும்முனை போட்டி. சிரஞ்சீவி அங்கு சூப்பர் ஸ்டார். போகும் இடமெல்லாம் பெரும் கூட்டம். அதேபோன்று 2026 – தமிழ்நாட்டில் திமுக , அதிமுக, விஜய் கட்சி என்று மும்முனை போட்டி. இங்கு விஜய் உச்சபட்ச நட்சத்திரம். அதேபோல், போகும் இடமெல்லாம் பெரும் கூட்டம்.

2009 ஆம் ஆண்டு ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், சென்ற தேர்தலை விட வாக்கு சதவிகிதம் மற்றும் வெற்றி பெற்ற இடங்கள் குறைந்தது. ஆட்சியின் அதிருப்தி வாக்குகள் தெலுங்கு தேசம் மற்றும் சிரஞ்சீவி கட்சி என இரண்டாக பிரிந்தது. இதனால், காங்கிரஸ் – 36.5% வாக்குகள் பெற்று 156 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 28.1% வாக்குகள் பெற்று 92 இடங்களில் வெற்றி பெற்றது.சிரஞ்சீவி கட்சி – 16% வாக்குகள் பெற்று 18 இடங்களில் வெற்றி பெற்றன.
அதேபோல், 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வைக்கும். சென்ற தேர்தலை விட வாக்கு சதவிகிதம் மற்றும் வெற்றிபெற்ற இடங்கள் குறையும். அங்கு சிரஞ்சீவி ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரித்தது போன்று, இங்கு விஜய் பிரிப்பார். இதனால், திமுக – 40% சதவீதம் வரை வாக்குகள் பெற்று 150 இடங்கள் முதல் 160 வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக – 35% சதவீதம் வரை பெற்று 65 இடங்கள் முதல் 75 இடங்கள் வரை பெறலாம். விஜய் கட்சி – 15% மூன்று இடம் வரை பெறக்கூடிய வாய்ப்புள்ளது.
அங்கு சிரஞ்சீவி கட்சியை கலைத்து விட்டு, ஒரு ராஜ்யசபா MP பெற்று காங்கிரசில் சேர்ந்து விட்டார். இங்கு விஜயும் அதே போன்று செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லது பவன் கல்யாண் போன்று அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, துணை முதல்வர் பதவியை பெற முயற்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஜய்க்கு முன்னர் அரசியலுக்கு வந்த கமல் அவர்களும் திமுக மூலம் ராஜ்யசபா MP ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
