Homeசெய்திகள்அரசியல்திருவொற்றியூரில் த.வெ.க. வேட்பாளர் முழங்கால் மண்டியிட்டு சென்று பிரார்த்தனை….

திருவொற்றியூரில் த.வெ.க. வேட்பாளர் முழங்கால் மண்டியிட்டு சென்று பிரார்த்தனை….

-

- Advertisement -

விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி திருவொற்றியூர் த.வெ.க வேட்பாளர் செந்தில்குமார் வேளாங்கண்ணியில் முழங்கால் மண்டியிட்டு நடந்து சென்று பிரார்த்தனை  மேற்கொண்டார்.திருவொற்றியூரில் த.வெ.க. வேட்பாளர் முழங்கால் மண்டியிட்டு சென்று பிரார்த்தனை…. வேளாங்கண்ணி மாதா திருக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட  தவெக  கட்சித் தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்று  தமிழக முதல்வராக வேண்டியும், தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட ஆனந்த் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து,  திருவொற்றியூர் தவெக கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் இன்று வேளாங்கண்ணியில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் முழங்கால் மண்டியிட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்தார்.

we-r-hiring

முன்னதாக தனது பிரார்த்தனை நிறைவேற்ற ஒரு கையில் விஜய் புகைப்படத்தையும் இன்னொருக்கையில் ஆனந்த் புகைப்படத்தை  வைத்து மணலில் முழங்கால் மண்டியிட்டு இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பிரார்த்தனை செய்தார்.

கோவிலுக்கு வந்த இளைஞர்கள் பெண்கள் அவரின் வித்தியாசமான வேண்டுதலை புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

MUST READ