Homeசெய்திகள்தமிழ்நாடுதோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி

-

- Advertisement -

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம். புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கு வாழ்த்துகள்’ என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பிஇதுகுறித்து கனிமொழி எம்.பி தனது வலைத்தளத்தில், “ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்பை ஏற்கிறோம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர்.

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம். அரசியல் – பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம்.

we-r-hiring

வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்” என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

“பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு – முதலமைச்சர் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது” – திமுக எம்.பி. கனிமொழி

 

 

MUST READ