கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட திமுக வேட்பாளர் அன்பழகன் இன்று வீதி வீதியாக சென்று வாக்களித்த கும்பகோணம் நகர மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
நடந்த முடிவுற்ற சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சாக்கோட்டை அன்பழகன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வினோத் ரவி 650 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். நூலிழை வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் இன்று மேலக்கொட்டையூரில் இருந்து வீதி வீதியாக சென்று, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

