Homeசெய்திகள்தமிழ்நாடு12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து

12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது – அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து

-

- Advertisement -

12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு மகிழ்சி அறிக்கிறது என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாழ்த்துகளை தெரவித்துள்ளாா்.12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துதமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த தேர்ச்சி உயர்விற்கு காரணமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மாணவர்கள் கடின உழைப்புடன் தேர்வை எதிர்கொண்டதுடன், ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் பயிற்சி அளித்ததன் பலனாக இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், கல்வித்துறையில் மாணவர்களின் நலனை முன்னிறுத்தியே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

we-r-hiring

இதனிடையே, மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த திட்டத்தால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே விளக்கமாக கூறியுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். புதிதாக யார் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

+2 தேர்வில் தமிழில் 100க்கு 100 பெற்று 83 பேர் சாதனை – தமிழ் ஆரிசியர் சங்கம் பெருமிதம்…

MUST READ