Homeசெய்திகள்அரசியல்கூட்டணி முடிவின் எதிரொலி –லோக்சபாவில் இருக்கை மாற்ற கோரிய கனிமொழி…

கூட்டணி முடிவின் எதிரொலி –லோக்சபாவில் இருக்கை மாற்ற கோரிய கனிமொழி…

-

- Advertisement -

காங்கிரஸ் உடனான கூட்டணி முறிவால், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு தனி இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.கூட்டணி முடிவின் எதிரொலி –லோக்சபாவில் இருக்கை மாற்ற கோரிய கனிமொழி…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட பிளவின் எதிரொலியாக, லோக்சபாவில் திமுக உறுப்பினர்களின் இருக்கை மாற்றத்தை கோரி, அக்கட்சியின் எம்பி கனிமொழி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் சூழ்நிலைகள் மாறியுள்ளதால், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமர்வது பொருத்தமாக இருக்காது என கனிமொழி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், “கூட்டணி முடிவுக்கு வந்த பிறகும் பழைய அமர்வு அமைப்பை தொடர்வது அவையின் தற்போதைய அரசியல் நிலையை பிரதிபலிக்காது. எனவே திமுக எம்.பி.க்களுக்கு தனியாக புதிய இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளாா்.

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது தவறு – எம்.ஏ.பேபி விமர்சனம்

MUST READ