பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை அஞ்சலி, இன்று அதிகாலை திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வருகை தந்த அஞ்சலியை, கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அவர்: “அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சந்நிதிகளில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கோயிலின் பல்வேறு பிரகாரங்களில் சுற்றி வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அதிகாலை நேரம் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் ஓரளவே காணப்பட்டது. இருப்பினும், நடிகை அஞ்சலியை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். புன்னகையுடன் ரசிகர்களை எதிர்கொண்ட அஞ்சலி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நடிகை அஞ்சலி அவ்வப்போது ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது சில முக்கியத் திரைப்படத் திட்டங்களில் நடித்து வரும் அவர், தனது படங்களின் வெற்றிக்கும், மன அமைதிக்கும் வேண்டி இந்த தரிசனத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவி சொத்து விவகாரம் – வழக்கை நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
