Homeசெய்திகள்வானிலைமுன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: மே 16 அன்று அந்தமானில் நுழைகிறது - வானிலை ஆய்வு...

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: மே 16 அன்று அந்தமானில் நுழைகிறது – வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட்!

-

- Advertisement -

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மக்களுக்குக் குளிர்ச்சியான செய்தியாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை: மே 16 அன்று அந்தமானில் நுழைகிறது - வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட்!இதன்படி, நாளை (மே 16) வாக்கில் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழைக்கான தொடக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அந்தமான் பகுதியில் மே 22 ஆம் தேதி வாக்கில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு பலத்த காற்று மற்றும் வங்கக்கடலில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக சுமார் ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது மே 16 அன்றே தொடங்கவுள்ளது.

we-r-hiring

இதன் தொடர்ச்சியாக, ஜூன் முதல் வாரத்தில் கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் பருவமழை முழுமையாகத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி:

வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை நகர்வு காரணமாக, அடுத்த 4 முதல் 5 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளா மற்றும் தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு!

 

MUST READ