Homeசெய்திகள்தமிழ்நாடுத.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை - வீரபாண்டியன் விளக்கம்

த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை – வீரபாண்டியன் விளக்கம்

-

- Advertisement -

தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார். த.வெ.க தலைமையில் “தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி” என்ற பெயரில் செயல்படும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்றும், அத்தகைய கூட்டணி அமைப்பு குறித்து தங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை - வீரபாண்டியன் விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனித்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராக கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றார்.

we-r-hiring

இந்நிலையில், மயிலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஒரு மாநிலங்களவை இடம் காலியானது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று அந்த இடம் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதளப் பதிவில், த.வெ.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அடங்கிய “தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணியின்” முதல் மாநிலங்களவை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமை மற்றும் பொறுப்பாக கருதுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வீரபாண்டியன், “தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அந்த கூட்டணி குறித்தோ, அதன் பெயர் குறித்தோ, மாநிலங்களவை வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவு கோரியோ யாரும் எங்களை அணுகவில்லை. எங்கள் கட்சித் தலைமையுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமாக பாஜக ஆதிக்கம் கொண்ட ஆட்சி உருவாகக் கூடாது என்பதற்காகவே த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஆனால், த.வெ.க தலைமையிலான தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து பயணித்து வருகிறோம்” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டார் – திருமாவளவன் பாராட்டு

MUST READ