spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரக்ஷன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம்... வெளியான முக்கிய அப்டேட்!

ரக்ஷன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம்… வெளியான முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

விஜய் டிவி ரக்ஷன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபல விஜே-வாக இருந்து வருபவர் ரக்ஷன். விஜய் டிவியின் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளுக்கு அவர் விஜே வாக இருந்து வருகிறார். மக்கள் மனதில் அதிக இடம் பெற்ற குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் ரக்ஷன் தான் விஜே-வாக  இருந்து வருகிறார்.

we-r-hiring

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘ படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ரக்ஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல் படம் முழுக்க அவர் பயணித்தார். நடித்த முதல் படத்திலே அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

Image

இந்நிலையில் ரக்ஷன் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகி உள்ளது. படத்திற்கு ‘மறக்குமா நெஞ்சம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தீனா, மலினா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை ராக்கோ யோகேந்திரன் என்பவர் இயக்குகிறார். சச்சின் வாரியார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.

MUST READ