spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்சுக்கு இணையாக உதவி செய்யும் விஷ்ணு விஷால்... குவியும் பாராட்டுக்கள்!

ராகவா லாரன்சுக்கு இணையாக உதவி செய்யும் விஷ்ணு விஷால்… குவியும் பாராட்டுக்கள்!

-

- Advertisement -

11 தடகள வீரர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்க இருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன.

we-r-hiring

நடிகர் என்பதைத் தாண்டி விஷ்ணு விஷால் நல்ல விளையாட்டு வீரர் கூட. கிரிக்கெட் அருமையாக விளையாடுவார். மேலும் அவரது மனைவி ஜுவாலா கட்டா சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை. உலக அளவில் பல போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இருவரும் சொந்தமாக விளையாட்டு அகாடெமி வைத்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகின்றனர்.

எனவே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட விஷ்ணு விஷால் தற்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு நல்ல செயலை செய்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய 11 தடகள வீரர்களுக்கு மாதம்தோறும் நிதி உதவி வழங்க இருப்பதாக  அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை உலகளவில் எடுத்துச் செல்ல இந்த மாதிரியான ஊக்குவிப்புகள் அவசியம். இதைச் செய்த விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுகள் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ