கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 குறைந்து நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி, சர்வதேச சந்தை மாற்றங்களின் எதிரொலியாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ.240 குறைந்து ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாகச் சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், தூய தங்கத்தின் (24 காரட்) விலையும் இன்று குறைந்துள்ளது. இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் தங்கம் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் நீடித்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

