Homeசெய்திகள்இந்தியாடெல்லியை அதிர வைக்கப் போகும் ஜூலை 20 போராட்டம் - சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக...

டெல்லியை அதிர வைக்கப் போகும் ஜூலை 20 போராட்டம் – சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக வெடிக்கும் புதிய புரட்சி!​

-

- Advertisement -

தேசிய அளவிலான தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், 19 நாட்களைக் கடந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உயிரைக் காப்பாற்றக் கோரியும் வரும் ஜூலை 20-ஆம் தேதி ஒரு வேளை உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் அறிவித்துள்ளார்.டெல்லியை அதிர வைக்கப் போகும் ஜூலை 20 போராட்டம் - சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக வெடிக்கும் புதிய புரட்சி!​​உயிருக்கு ஆபத்தான நிலையில் சோனம் வாங்சு
​லடாக் பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடி வரும் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், தற்பொழுது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 19 நாட்களைக் கடந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உணவு உட்கொள்ளாததால் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தசைகள் சிதையத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ​அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, “அவரைச் சாக விட்டுவிடாதீர்கள்” என்று உச்ச நீதிமன்றமே மறைமுகமாக எச்சரிக்கும் நிலைக்குச் சூழல் சென்றுள்ளது.

​நீட் முறைகேடும் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலும்
இந்த ஆண்டு 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் (NEET) தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் கியூட் (CUET) உள்ளிட்ட பிற தேர்வுகளிலும் குளறுபடிகள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

we-r-hiring

​மாணவர்கள் தற்கொலை
நீட் தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, மறுதேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து மாண்டுபோன சோகம் நிகழ்ந்துள்ளது.

அமைச்சரின் அலட்சியம்
கல்வித் திட்டத்திலோ, மாணவர் நலனிலோ எவ்வித அக்கறையும் காட்டாமல், இந்தித் திணிப்பையும், நிதிப் பகிர்வு மிரட்டல்களையும் மட்டுமே கையில் எடுத்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். டெல்லியை அதிர வைக்கப் போகும் ஜூலை 20 போராட்டம் - சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக வெடிக்கும் புதிய புரட்சி!​

​ஒன்றிய அரசின் பாராமுகம் மற்றும் மவுனம்
​உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெருமை பேசும் இந்தியாவில், ஒரு மனிதரின் உயிர் போகும் நிலையில் இருந்தும் ஒன்றிய பாஜாக அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடத் தயாராக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது என்று க.கனகராஜ் விமர்சித்துள்ளார்.

​ஜூலை 20 போராட்டம் – 6 முக்கிய அமைப்புகள் அறைகூவல்
​பேசா மடந்தையாக இருக்கும் ஒன்றிய அரசைப் பேச வைக்கவும், சோனம் வாங்சுக்கின் உயிரைக் காக்கவும் தமிழகத்தைச் சேர்ந்த 6 முக்கிய இடதுசாரி மக்கள் அமைப்புகள் இணைந்து வரும் ஜூலை 20-ஆம் தேதி ஒரு வேளை உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

“நீட் முறைகேட்டுக்கு எதிராக வெடித்தது மாணவர் புரட்சி: மத்திய அமைச்சருக்கு எதிராக ராஜஸ்தான் ஸ்தம்பித்தது!

MUST READ