Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் வெடித்தது புதுப் புயல்! கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற செயலகம்.. ஷாக்கில் காங்கிரஸ்!

டெல்லியில் வெடித்தது புதுப் புயல்! கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற செயலகம்.. ஷாக்கில் காங்கிரஸ்!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, டெல்லியிலும் அதன் எதிரொலி பலமாக வீசத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கூட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எம்பிக்களின் இருக்கைகள் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.டெல்லியில் வெடித்தது புதுப் புயல்! கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற செயலகம்.. ஷாக்கில் காங்கிரஸ்!

​திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று, மாநிலங்களவைத் தலைவர் இதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

we-r-hiring

​கனிமொழி எம்.பி.யின் கடிதமும் அவைத் தலைவர் நடவடிக்கையும்
​தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமரும் பிரதான வரிசையிலிருந்து தங்களை மாற்றியமைக்க வேண்டும் என திமுக முடிவு செய்தது. ​இதன்படி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி, மக்களவைச் சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவருக்கு (துணை குடியரசுத் தலைவர்) அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், “காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிவிட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக் கூட்டமைப்பின் வரிசையில் இருந்து திமுக எம்பிக்களின் இருக்கைகளைத் தனியாக மாற்றித் தர வேண்டும்” என்று கோரியிருந்தார்.

​இந்தக் கோரிக்கை கடிதத்தை ஏற்றுக் கொண்ட மாநிலங்களவைச் செயலகம், நாளை மறுநாள் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்டமாக மாநிலங்களவையில் (Rajya Sabha) திமுக எம்பிக்கள் அமர்வதற்கான இருக்கைகளை முறைப்படி மாற்றி அமைத்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதேபோல் மக்களவையிலும் (Lok Sabha) இருக்கை மாற்றங்கள் விரைவில் இறுதி செய்யப்படவுள்ளன.

டெல்லியில் வெடித்தது புதுப் புயல்! கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற செயலகம்.. ஷாக்கில் காங்கிரஸ்!

​காங்கிரஸ் போராட்டங்களைப் புறக்கணிக்க திமுக முடிவு
​கூட்டணி முறிவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் எந்தவொரு கூட்டுப் போராட்டத்திலும், எம்பிக்கள் கூட்டத்திலும் இனி திமுக கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.

​திமுக எம்பிக்கள் தரப்பு தகவல்
“தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் இனி எவ்வித அரசியல் மற்றும் கூட்டணிக் பிணைப்பும் திமுகவிற்கு இல்லை. எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகளில் திமுக தனித்தே குரல் எழுப்பும். நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்போ அல்லது அவைக்குள்ளோ காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் கூட்டுக் கண்டனப் போராட்டங்களை திமுக முற்றிலுமாகப் புறக்கணிக்கும்.”

​நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்குச் சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு, நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸை விட்டுத் தள்ளி நிற்கும் திமுகவின் இந்த அதிரடி அரசியல் நகர்வு, டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இனி காகிதப் பணம் இல்லை; பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்?’ – கள்ளநோட்டை ஒழிக்க ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்!

MUST READ