Homeசெய்திகள்அரசியல்ஆளும்கட்சியாக இருந்தால் ஒட்டிக்கொள்வதற்கும், எதிர்கட்சியாக இருந்தால் பயந்து பம்புவதற்கும் நான் கட்டப்பா அல்ல!” - நடிகர்...

ஆளும்கட்சியாக இருந்தால் ஒட்டிக்கொள்வதற்கும், எதிர்கட்சியாக இருந்தால் பயந்து பம்புவதற்கும் நான் கட்டப்பா அல்ல!” – நடிகர் சத்யராஜ் அதிரடி பேச்சு

-

- Advertisement -

ஆளுங்கட்சியாக இருந்தால் போய் அட்டை போல ஒட்டிக்கொள்வதற்கும், எதிர்கட்சியாக இருந்தால் பயந்து பம்பி ஓடுவதற்கும் நான் ‘கட்டப்பா’ அல்ல” என்று நடிகர் சத்யராஜ் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சத்யராஜ்

we-r-hiring

சத்யராஜ் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

சமூக நீதியே திமுகவின் அடித்தளம்:

1949-இல் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல; அது சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டிற்கும் பாடுபடும் ஒரு சமூக சீர்திருத்த இயக்கம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக நீதியை நிலைநாட்டுவதே அதன் நோக்கம்.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டுகோள்:

இன்று தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகமும், மறைந்த கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் அவர்களும் அமைத்துக் கொடுத்த பாதையில்தான் ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, முந்தைய அரசு கொண்டு வந்த நல் திட்டங்களின் பெயர்களை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளுங்கள்; ஆனால் அத்திட்டங்களைக் கைவிட்டுவிடாதீர்கள் என்று தற்போதைய ஆட்சிக்கு வேண்டுகோள் விடுத்தார்,.

“திமுகவின் கட்டப்பாவாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்”:

“சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேரன்களுடன் நேரத்தைச் செலவிடுவதையே நான் விரும்புவேன். திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது அழைத்தால் கூட ஏதேனும் காரணம் கூறித் தப்பிப்பேன். ஆனால், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் இந்தச் சூழலில், அதற்குத் துணையாக நிற்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். என்னை திமுகவின் கட்டப்பாவாகவே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார்,.

காமராஜர் முதல் ஸ்டாலின் வரை:

பெரியாரின் கொள்கைகளைத் தழுவி பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் சத்துணவுத் திட்டங்களைக் கொண்டு வந்தார். கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்ந்தது. இன்று யார் கட்சி தொடங்கினாலும் பெரியார், அம்பேத்கர் வழியில்தான் செயல்பட வேண்டும் என்ற சூழலை உருவாக்கியதே திராவிட இயக்கத்தின் சாதனை ஆகும். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டனான தான், சமூக நீதியை முதன்மையாகக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

MUST READ