Homeசெய்திகள்தமிழ்நாடு​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக்...

​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

-

- Advertisement -

​சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடு​​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

இந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கொள்கை ரீதியாக உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தான் என்று திமுக செய்தித் தொடர்பாளர் சைதை சாதிக் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

​ ​உயர்சாதி இடஒதுக்கீடு மசோதாவும் திமுகவின் நிலைப்பாடும்
​”கடந்த 2020 ஆம் ஆண்டில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு (EWS) மசோதாவை பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதை ஆதரித்து வாக்களித்தன. ​ஆனால், சமூக நீதிக் கொள்கையில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காமல், பாஜகவின் அந்த மசோதாவைத் துணிச்சலுடன் எதிர்த்து நின்று குரல் கொடுத்த ஒரே இயக்கம் திமுக மட்டுமே. அகில இந்திய அளவில் சமூக நீதியைக் காக்க திமுக என்றும் தயங்கியதில்லை.”​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

​கூட்டணி குறித்த வதந்திகளுக்குப் பதில்
​திமுக – பாஜக கூட்டணி குறித்து எழும் தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பற்றிப் பேசிய அவர், ​”திமுக – பாஜக கூட்டணி என்று திட்டமிட்டு பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் திசைதிருப்பும் முயற்சியாகும். தேர்தல் தோல்விகளையும், சொந்த அரசியல் மாற்றங்களையும் மறைப்பதற்காகச் சிலர் இத்தகைய போலி பிம்பங்களை உருவாக்க முற்படுகிறார்கள். ​இந்தியாவிலேயே முதன்முதலாகப் பிரதமர் மோடிக்கு எதிராக ‘கோ பேக் மோடி’ (Go Back Modi) என முழக்கமிட்டு, கருப்புக் பலூன்களைப் பறக்கவிட்டுப் எதிர்ப்பைப் பதிவு செய்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான். அப்படிப்பட்ட இயக்கம் ஒருபோதும் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ளாது.”​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

​தேசிய அரசியலில் மு.க. ஸ்டாலினின் பங்கு
​”நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தென்மாநில உரிமைகள் விவகாரத்தில் திமுக தொடர்ந்து போராடி வருகிறது. அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் எதிர்காலத்திற்குத் தூணாக நிற்பதிலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லியின் முக்கியத் துருப்புச் சீட்டாகத் திகழ்கிறார். ​மாணவர் போராட்டங்கள் மற்றும் நீட் விவகாரத்தில் பாஜக அரசின் தோல்விகளைத் திமுக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது,” எனத் தெரிவித்தார்.

“நாட்டில் குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி” – நிர்மலா சீதாராமன் அதிரடி விமர்சனம்!

MUST READ