Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் கொந்தளிப்புக்கு இடையே 'ஜனநாயகன்' திரைக்கண்டு களிப்பு - மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!

நீட் கொந்தளிப்புக்கு இடையே ‘ஜனநாயகன்’ திரைக்கண்டு களிப்பு – மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!

-

- Advertisement -

நாடு முழுவதும் மாணவர்கள் வீதியில் போராடும் வேளையில் திரையரங்கில் கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.நீட் கொந்தளிப்புக்கு இடையே 'ஜனநாயகன்' திரைக்கண்டு களிப்பு - மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தலைநகர் டெல்லி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வரை மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியில் இறங்கித் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடே இந்த விவகாரத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், மாநிலத்தில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் காட்டி வரும் அணுகுமுறை பொதுமக்கள் இடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் காணொளி ஒன்று இந்த முரண்பாட்டை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.நீட் கொந்தளிப்புக்கு இடையே 'ஜனநாயகன்' திரைக்கண்டு களிப்பு - மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!

we-r-hiring

வைரலாகும் காணொளி உணர்த்தும் உண்மை
நாடு முழுவதிலும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்காகக் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வரும் நிலையில், தமிழகத்தில் அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய பெருங்கூட்டம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத் திரையரங்குகளில் குவிந்து கிடக்கும் காட்சிகள் அந்தச் காணொளியில் பதிவாகியுள்ளன. ஒருபுறம் மாணவர்களின் மருத்துவக் கனவும் எதிர்காலமும் கேள்விக்குறியாகி, நாடாளுமன்றம் வரை அமளி காடாகி முடங்கிக் கிடக்கிறது. மறுபுறம் மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் இத்தகைய தீவிரச் சூழலிலும் பொழுதுபோக்கிற்கு முன்னுரிமை அளித்துத் திரையரங்குகளில் நேரத்தைக் கழிப்பது, மக்களாட்சியின் தார்மீகப் பொறுப்புக்கூறல் எந்த அளவிற்குச் சரிவைச் சந்தித்துள்ளது என்பதை உணர்த்துவதாகச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.

“மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க அமைச்சர் ‘ஜனநாயகன்’ பார்த்து செல்ஃபி போடுகிறார்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

MUST READ