spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம்!

சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம்!

-

- Advertisement -

 

சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம்!
File Photo

தி.மு.க.வின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் இடம் பெறவில்லை.

we-r-hiring

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இரண்டு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்து மூன்றாமாண்டை அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க.வின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி, தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகருக்கு உட்பட்ட சிம்மக்கல் பகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவிருப்பதாக முதலில் வெளியான பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, இந்த பட்டியல் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனின் பெயர் இடம் பெற்றது.

தனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்த நடிகை கயல் ஆனந்தி!

மதுரையில் நேற்று (மே 07) நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ