பிக்பாஸ் வின்னர் அசீம் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொலைக்காட்சி தொடர் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அசீம். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் 6-வது சீசனில் அசீம் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றார். பிக்பாஸ் சீசன் 6-ன் வின்னராக டைட்டிலும் வென்றார் அசீம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அஸீமூக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளனர். இந்நிலையில் அசீம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் அசீம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
படம் குறித்த டிஸ்கஷன் மற்றும் படத்துக்கான லொகேஷன் தேர்வுக்காக அசீமும் பொன்ராமும் ராஜஸ்தானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எல்லாம் முடிந்ததும் அவர்கள் இருவரும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.