Homeசெய்திகள்சென்னை​டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

​டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

​நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அருகில் ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

​போராட்ட அமைப்புகள் மற்றும் முக்கியக் கோரிக்கைகள்
​ஆட்டோ டாக்ஸி தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ​ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள், ​டெல்லியில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடி நடத்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ​தமிழ்நாட்டிலும் நீட்டுக்கு எதிராகப் போராட முயலும் மாணவர்களைக் காவல்துறையைக் கொண்டு அடக்கி ஒடுக்கும் த.வெ.க அரசிற்கு எதிராகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

we-r-hiring

​மாணவர்களின் கனவைச் சிதைத்துத் தற்கொலைக்குத் தூண்டும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ​நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்து மத்திய பாஜக அரசே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

​பாலசுப்பிரமணியன் (செயல் தலைவர், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்) கருத்து
​ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் தெரிவிக்கையில், ​”நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது. இது யாருடைய தனிப்பட்ட தூண்டுதலினாலும் நடைபெறும் போராட்டம் அல்ல; மாணவர்களின் எதிர்காலத்திற்கான போராட்டம்.

​டெல்லியில் காவல்துறையினருடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரடியாகப் போராட்டக் களத்திற்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.” ​என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நீட் போராட்டத்தில் திடீர் பரபரப்பு: நடிகை சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி வெளியேற்றம்!

MUST READ