நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (Vishwanath & Sons) திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘The Wedding Song’ இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா குரலில் வெளியாகும் கல்யாணப் பாடல்
வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக ‘The Wedding Song’ வெளியாகிறது. குறிப்பாக, இப்பாடலை நடிகர் சூர்யாவே சொந்தக் குரலில் பாடியுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திரக் பட்டாளம் & தயாரிப்பு விவரங்கள்
குடும்பப் பின்னணியைக் கொண்ட கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சித்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மாலை 5.05 மணிக்கு கொண்டாட்டம்!
இன்று மாலை 5.05 மணிக்கு ஆதித்யா மியூசிக் யூடியூப் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘The Wedding Song’ லிரிக்கல் வீடியோ வெளியாகிறது. சமூக வலைதளங்களில் ‘Suriya’, ‘VAS’ மற்றும் ‘TheWeddingSong’ போன்ற ஹேஷ்டேகுகள் இணையவாசிகளிடையே தற்போது டிரெண்டாகி வருகின்றன.
