Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் தவறானது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி

நீட் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் தவறானது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி

-

- Advertisement -

மத்தியில் ஆண்டை செலுத்தும் பாஜக அரசு எப்போதுமே மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை சரியாக கையாண்டது இல்லை என்றும், நீட் தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.​நீட் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் தவறானது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி

நீட் முறைகேடுகள், மாணவர் போராட்டங்கள் மற்றும் கல்வி கொள்கை குறித்து தராசு ஷியாம் முன் வைத்துள்ள கருத்துக்கள்,

we-r-hiring

​பிரச்சனைகளை கையாளத் தவறும் மத்திய அரசு
​விவசாயிகள் போராட்டம் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டங்களை மத்திய அரசு எவ்வாறு கையாண்டதோ, அதேபோன்றுதான் தற்போது டெல்லியில் தீவிரமடைந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தையும் கையாள்கிறது. கேள்விகளே கேட்க முடியாத உயரத்தில் தாம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார். ஆனால், மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் கொதிநிலையையும் புரிந்து கொள்ளத் தவறுவது ஆட்சியாளர்களுக்குப் பெரிய அபாயச் சங்கை ஊதும்.நீட் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் தவறானது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி

​கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்
​நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். அப்போதே இந்த போராட்டத்திற்கு தற்காலிக வெற்றி கிடைக்கும்.  ​இருப்பினும், இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில், 1976-இல் அவசரநிலையின் போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் பள்ளி கல்விக்கட்டமைப்பும் சூழலும் வேறுபட்டவை. கிராமப்புற மாணவர்களையும், நகரப்புற சிபிஎஸ்இ (CBSE) மாணவர்களையும் ஒரே அளவுகோலில் வைத்து மதிப்பிடுவது முற்றிலும் சாத்தியமற்றது.நீட் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் தவறானது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி​அரசியலமைப்பு மறுஆய்வு தேவை
​மத்திய அரசில் அதிகாரம் குவிந்து கிடப்பதே மாநிலங்களின் உரிமைப் பறிப்புக்கு முக்கியக் காரணம். நமது நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டுமானால், இந்திய அரசியலமைப்பை மறுஆய்வு (Review) செய்ய புதிய அமர்வு அமைக்கப்பட வேண்டும். ​அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசும் கொள்கைகளை, ஆட்சியில் பங்கு வகிக்கும் போது செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றன. எது எப்படி இருப்பினும், மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில் மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று தராசு ஷியாம் சுட்டிக்காட்டினார்.

வந்தே பாரத் ரயில்கள் & பள்ளிச் சத்துணவுத் திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய்: மத்திய, மாநில அரசுகளுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

MUST READ