Homeசெய்திகள்கட்டுரைதமிழகத்தில் இண்டியா கூட்டணி இல்லை!" - விசிக முதன்மைச் செயலாளர் ஆலூர் ஷா நவாஸ் பரபரப்புப்...

தமிழகத்தில் இண்டியா கூட்டணி இல்லை!” – விசிக முதன்மைச் செயலாளர் ஆலூர் ஷா நவாஸ் பரபரப்புப் பேட்டி!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முதன்மைச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஆலூர் ஷா நவாஸ் புதிய தலைமுறை ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் பல அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆலூர் ஷா நவாஸ்

we-r-hiring

தமிழகத்தில் இண்டியா கூட்டணி இல்லை:

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் ‘இண்டியா’ கூட்டணி முறையான வடிவம் பெறவில்லை என்றும், கூட்டணி அமைக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருவதாகவும் ஆலூர் ஷா நவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக இல்லாமல் காங்கிரஸால் தமிழ்நாட்டில் எவ்விதக் கூட்டணியையும் கட்டமைக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை என்பதே நிதர்சனம் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தை மறைமுகமாக பாஜக ஆளுகிறதா?

தமிழக அரசை பாஜகவின் மறைமுகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது போன்ற தோற்றம் நிலவுவதாக ஷா நவாஸ் விமர்சித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் சாய்குமாரின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் மூலம் முந்தைய காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை மாற்றாமல் தொடர்ந்து தக்கவைப்பதும், தமிழ்நாட்டின் மீதான பற்றுள்ள அதிகாரிகள் பலரை ஓரங்கட்டி டம்மியாக்கி இருப்பதும் ஏன் என்ற கேள்சியை அவர் எழுப்பியுள்ளார்.

அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணிக் குழப்பங்கள் குறித்து விசிக தரப்பில் இருந்து வெளிவந்துள்ள இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

MUST READ