Homeசெய்திகள்மாவட்டம்சோளிங்கரில் தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் ஆதரவாளர்கள் வன்முறை: செய்தியாளர்கள் மற்றும் யூடியூபர் மீது சரமாரி...

சோளிங்கரில் தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் ஆதரவாளர்கள் வன்முறை: செய்தியாளர்கள் மற்றும் யூடியூபர் மீது சரமாரி தாக்குதல்!

-

- Advertisement -

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தவெக எம்.எல்.ஏ

we-r-hiring

சம்பவ பின்னணி

சோளிங்கரில் உள்ள திரையரங்கு ஒன்றில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்ட போது, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த தவெக எம்.எல்.ஏ கபிலிடம் ‘யூடியூபர்’ சிவா என்பவர் விமர்சனம் மற்றும் கருத்து கேட்க முற்பட்டுள்ளார். அப்போது எம்.எல்.ஏ கபில் அவரை மிரட்டும் வகையிலும் தாக்க முற்படும் வகையிலும் கையை ஓங்கிய வீடியோ சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி வைரலானது.

புகைப்பட நிலையத்தில் தாக்குதல்

இந்த வீடியோ வெளியானது குறித்து ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், சோளிங்கர் அண்ணா சிலை அருகே உள்ள யூடியூபர் சிவாவின் புகைப்பட நிலையத்திற்குச் சென்று அவரை பலவந்தமாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலும் வீடியோ அழிப்பும்

இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ‘தினகரன்’ நாளிதழ் நிருபர் அரங்கநாதன் மற்றும் ‘தினமலர்’ நாளிதழ் நிருபர் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடைக்குள் அடைத்து வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களின் செல்போன்களைப் பறித்த கும்பல், தாக்குதல் குறித்துப் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளது.

சிகிச்சையும், கண்டனங்களும்

தாக்குதலில் காயமடைந்த நிருபர்கள் அரங்கநாதன், கல்யாணசுந்தரம் மற்றும் யூடியூபர் சிவா ஆகிய மூவரும் மீட்கப்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் ஆய்வாளர் (SI) முனீர் பாஷா தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகவும், அவர் முன்னிலையிலேயே வீடியோக்கள் அழிக்கப்பட்டதாகவும் ஊடகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) சிபினிடமும், சோளிங்கர் காவல் நிலையத்திலும் ராணிப்பேட்டை பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர்கள் நேரில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாகக் கைது செய்யக்கோரி சோளிங்கரில் உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டப் பத்திரிகையாளர் சங்கங்கள் இந்தக் வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!

MUST READ