நேற்று பிளஸ் +2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து நடிகர் விஷால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. வழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட அதிகமாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர். இந்நிலையில் நடிகர் விஷால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வெற்றி பெறாத மாணவர்களுக்கும் சேர்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும் இந்த தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம்,தோல்வி அடைந்ததாக நினைக்க வேண்டாம். இந்த முடிவு உங்கள் தேர்வுக்கான முடிவே அன்றி வாழ்கைக்கானது அல்ல. வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்வின் ஒரு அங்கம் தான். தோல்வியுற்ற மாணவர்கள் இன்னும் நன்றாக உழைத்து நன்றாக படித்து வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தேர்வில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்துள்ளார்.
Congrats & Best Wishes to all Students who passed in +2 exams.
I want the Students who didn’t pass in the exams to not feel upset or dejected, this result is not the end, Success & Failures are part & parcel of life. I request these Students to work harder & study better. I am…
— Vishal (@VishalKOfficial) May 8, 2023
இதற்கிடையில் விஷால் தற்போது ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன் ரித்து வர்மா, அபிநயா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் இருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.