Homeசெய்திகள்அரசியல்திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

-

- Advertisement -

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி வந்தாலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களே மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக

we-r-hiring

தவெக அரசின் மீதான குற்றச்சாட்டுகளும் மக்கள் மனநிலையும்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து இதுவரை உருப்படியாக எந்தவொரு செயலையும் செய்யவில்லை என்றும், விபத்து காரணமாகவே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், “எந்தத் திட்டத்தின் பெயர்களை மாற்றினாலும், எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள்தான் மக்கள் மனங்களில் உள்ளன.

தாய் உள்ளத்தோடு கொண்டுவரப்பட்ட ‘தாயுமானவன்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயன்களை மக்கள் இன்று முழுமையாக உணர ஆரம்பித்துவிட்டனர். பெயர்களை மாற்ற மாற்ற, மக்கள் ஸ்டாலின் பெயரைத்தான் நினைவுகூருவார்கள்” என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி விவகாரமும் மின் கட்டணக் குற்றச்சாட்டும்

திமுகவில் மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருபவர் செந்தில் பாலாஜி என்று குறிப்பிட்ட அவர், அவரைத் திட்டமிட்டுப் பழிவாங்க முற்படுகிறார்கள் என்றும், ஆனால் எத்தகைய சோதனைகளைக் கொடுத்தாலும் திமுகவினரை யாரும் அழிக்க முடியாது என்றும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசாங்கம் நடப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று சாடியதுடன், தெளிவற்ற மற்றும் திறமையற்ற ஒரு ‘சர்கார்’ தற்போது மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருவதாகக் கூறினார்.

குறிப்பாக, பொதுமக்களிடம் இருந்து கூடுதல் மின்கட்டணம் என்ற பெயரில் பணத்தை மின்துறை திருடி வருவதாகவும், இது அப்பட்டமான ஒரு வகையான மோசடி என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

காசா அமைதி ஒப்பந்தத்திற்கு ஜெர்மன் வரவேற்பு: எல்லைச் சாவரங்களை தாமதமின்றி திறக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் வலியுறுத்தல்!

MUST READ