Homeசெய்திகள்மாவட்டம்கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் -...

கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!

-

- Advertisement -

நெல்லையில் கன்னடியன் கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்கப்படாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

விவசாயிகள்

we-r-hiring

கன்னடியன் கால்வாயும் கார் பருவ சாகுபடிச் சிக்கலும்

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி மூலமாகப் பாசன வசதி பெறும் பழமையான கால்வாய்களில் கன்னடியன் கால்வாய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கால்வாய் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லிடைக்குறிச்சியில் இருந்து பிராஞ்சேரி வரை சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நடப்பு கார் பருவ சாகுபடிக்காக ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து 125 நாட்களுக்குக் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் தீவிரமாக விவசாயப் பணிகளை மேற்கொண்டனர். சில இடங்களில் பயிர்கள் கதிர் தள்ளும் அளவுக்கு நன்றாக வளர்ந்து வந்தாலும், கடைமடை வரை தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்றடைய 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது வெறும் 150 முதல் 200 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. அதுவும் சுழற்சி முறையில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை

இது தொடர்பாக விவசாயிகள் அவசரக் கூட்டத்தை நடத்தி, கன்னடியன் கால்வாய் பாசனத்திற்கு முழுமையாகத் தண்ணீர் வழங்கக் கோரி, வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயி பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நூதன முறையில் நகைகளை அடகு வைத்து ஏக்கருக்கு 15,000 முதல் 17,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தற்போது வயல்களில் வெடிப்பு விழுந்து பயிர்கள் கருகுகின்றன. அதிகாரிகள் 10 நாட்கள் தண்ணீர் திறந்து 5 நாட்கள் அடைப்பதாகக் கூறுகிறார்கள்.

அவ்வாறு திறந்தாலும் முழுமையாக 400 கன அடி தண்ணீர் வீதம் திறக்க வேண்டும்; 200 கன அடி திறந்தால் கடைமடை வரை தண்ணீர் வருவது சந்தேகம். எனவே அரசு மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

MUST READ