Homeசெய்திகள்கட்டுரைதடம் மாறும் தவெக அரசு: வெளுத்துவாங்கும் ஆளூர் ஷானவாஸ்

தடம் மாறும் தவெக அரசு: வெளுத்துவாங்கும் ஆளூர் ஷானவாஸ்

-

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைத்த விதம் குறித்தும், அக்கட்சியின் கடந்த இரண்டு மாத கால செயல்பாடுகள் குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷானவாஸ் விகடன் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல்வேறு முக்கிய அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆளூர் ஷானவாஸ்

we-r-hiring

கடந்த காலங்களில் தவெக-வை விசிக மிகக் கடுமையாக எதிர்த்து வந்த போதிலும் தற்போதைய அரசியல் சூழலில் புதிய ஆட்சி அமைவதற்குத் துணை நிற்பதும், அமைச்சரவையில் பங்கு பெறுவதும் கட்சியின் கால் நூற்றாண்டு கால முழக்கமான ‘ஆட்சியில் பங்கு’ என்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் தொண்டர்களின் எண்ண ஓட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். எனினும், தவெகவுடன் இணைந்து பயணிப்பதில் சில முரண்பாடுகளும் தயக்கங்களும் தமக்கு இருப்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

கொள்கை முரண்பாடுகளும் விமர்சனங்களும்:

ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தாலும், கூட்டணி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும், தங்களுக்கென்று தனித்த பார்வையும் விமர்சனங்களும் உண்டு என்றும் விசிக தலைவர் தெளிவுபடுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, சட்டமன்றத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்பது மிகப்பெரிய தவறு. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் தாய் வாழ்த்துக்கு நேர்ந்த நிலை மிகவும் கண்டனத்திற்குரியது.

தற்போது உள்ள தலைமைச் செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சரால் நியமனம் செய்யப்பட்டவர் இல்லை; அவர் மத்திய பாஜக அரசால் நியமனம் செய்யப்பட்டவர். அதேபோன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற நில மோசடி விவகாரத்தில் பாஜகவின் மௌனம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள விசிகவின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷானவாஸ், இவை கொள்கை சார்ந்த முடிவுகள் என்பதால் உடனடியாக சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாஜகவின் மறைமுக ஆதரவு குறித்த சந்தேகம்:

தவெக கட்சி அதிமுக மற்றும் அமமுக எம்எல்ஏ-க்களைத் தன் பக்கம் ஈர்த்த விதம் மற்றும் தேர்தல் நேரத்தில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்ட விவகாரம் ஆகியவற்றின் பின்னணியில் பாஜகவின் மறைமுகச் செயல்பாடுகள் இருப்பதாக சந்தேகம் எழுவதாகவும், இது தவெக ஆட்சிக்கு நல்ல பெயரைத் தராது என்றும் ஷானவாஸ் கருத்துத் தெரிவித்தார்.

மாற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:

தான் வேறு கட்சிக்குச் செல்லப் போவதாக வந்த அவதூறுகளையும் விமர்சனங்களையும் தான் பெரிதுபடுத்தவில்லை என்றும், முழுமையாகக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் பரப்புரை மேற்கொண்டதாகவும், தவெக-விசிக கூட்டணி மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த இறுதி முடிவை விசிக தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

MUST READ