Homeசெய்திகள்உலகம்"உடனே வெளியேறுங்கள்!" - மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு வாஷிங்டன் அவசரக் கெடு!

“உடனே வெளியேறுங்கள்!” – மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு வாஷிங்டன் அவசரக் கெடு!

-

- Advertisement -

மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் போர் மற்றும் ராணுவ மோதல்களால் எப்போது வேண்டுமானாலும் பேராபத்து வெடிக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அல்லது அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு அப்பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன."உடனே வெளியேறுங்கள்!" - மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு வாஷிங்டன் அவசரக் கெடு!எச்சரிக்கையின் பின்னணி என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நேரடி மோதல்களும், வான்வழித் தாக்குதல்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியமே பெரும் போர் மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த சூழலில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால், ஜோர்டான், இஸ்ரேல், ஈராக், லெபனான், ஓமன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் அவசர காலப் பாதுகாப்பு எச்சரிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அமெரிக்க தூதரகங்களின் முக்கிய அறிவுறுத்தல்கள்
 உடனடி வெளியேற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் வணிகரீதியான விமானங்கள் மற்றும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். வான்வெளி மூடல் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிப்பு: போர் சூழல் எந்த நேரத்திலும் தீவிரமடையலாம் என்பதால், திடீர் வான்வெளி மூடல்கள் மற்றும் விமான ரத்துகளைச் சமாளிக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

we-r-hiring

 நாடுகள் வாரியான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

  •    இஸ்ரேல்: நாட்டு மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள பதுங்கு குழிகளை (Bomb shelters) எங்குள்ளது என முன்கூட்டியே அறிந்து பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
  •    ஜோர்டான்:சமீபத்தில் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்கான அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு அருகில் செல்வதை முழுமையாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  •    லெபனான்: அவசரகாலப் பணியாளர்கள் அல்லாத இதர அரசு அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் (Ordered departure) பெய்ரூட் தூதரகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச வர்த்தகப் பாதைகளிலும் நேரடி தாக்கம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதீத பதற்றம் காரணமாக செங்கடல் மற்றும் முக்கிய கடல்வழிப் போக்குவரதிகளும், சர்வதேச விமான சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையை அமெரிக்க வெளியுறவுத் துறை உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், உலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

சிஐஏ மற்றும் மொசாத் உளவு அமைப்புகளுக்குத் தண்ணி காட்டும் ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி: மத்திய கிழக்கில் அரங்கேறும் ஹாலிவுட் மிஞ்சிய ஸ்பை திரில்லர்!

MUST READ