HomeBreaking Newsஸ்பைடர் மேனுக்குப் பதில் 'ஜனநாயகன்'.. டிக்கெட் குளறுபடியால் அண்ணாசாலையில் முற்றுகைப் போராட்டம்!

ஸ்பைடர் மேனுக்குப் பதில் ‘ஜனநாயகன்’.. டிக்கெட் குளறுபடியால் அண்ணாசாலையில் முற்றுகைப் போராட்டம்!

-

- Advertisement -

டிக்கெட் குளறுபடியால் வாடிக்கையாளர்களுடன் மோதல்: ‘ஏ’ சான்றிதழ் படத்தை சிறுவர்களுக்குத் திரையிட முயன்றதாகச் சர்ச்சை!ஸ்பைடர் மேனுக்குப் பதில் 'ஜனநாயகன்'.. டிக்கெட் குளறுபடியால் அண்ணாசாலையில் முற்றுகைப் போராட்டம்!

சென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ்பெற்ற கேசினோ திரையரங்கில், திரைப்படக் காட்சிகளை மாற்றித் திரையிட்டது மற்றும் முன்பதிவு செய்த தொகையைத் திரும்பத் தராமல் அலைக்கழித்தது தொடர்பாகக் கடும் வாக்குவாதம் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

we-r-hiring

டிக்கெட் புக்கிங் குளறுபடியும் தியேட்டர் நிர்வாகத்தின் அலட்சியமும்
விடுமுறை நாளை ஒட்டி, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைன் செயலி மூலமாக காலை 11:30 மணி காட்சிக்கு ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படம் பார்ப்பதற்காக முன்பதிவு செய்து திரையரங்கிற்கு வந்துள்ளனர். ஆனால், திரையரங்கிற்கு வந்தவர்களிடம், காலை வேளையில் ‘ஸ்பைடர் மேன்’ படம் திரையிடப்படவில்லை என்றும், செயலியில் தவறான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தியேட்டர் நிர்வாகம் திடீரெனக் கூறியுள்ளது.

மேலும், ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்களைக் காலை 11:30 மணிக்கு பதிலாக இரவு 11:30 மணிக்கு வந்து ‘ஸ்பைடர் மேன்’ படத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாங்கள் செலுத்திய பணத்தை உடனடியாகத் திரும்பக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுப்பு – வாக்குவாதம்
பணத்தைத் திருப்பிக் கேட்ட பொதுமக்களிடம், தாங்கள் அதற்குப் பொறுப்பல்ல என்றும், முன்பதிவு செயலிதான் பொறுப்பு என்றும் கூறி நிர்வாகத்தினர் பொறுப்பற்ற முறையில் தட்டிக்கழித்துள்ளனர். பொதுமக்கள் தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத்தான் பணம் கணக்கில் திரும்பச் செலுத்தப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘ஏ’ சான்றிதழ் படம் பார்க்க வற்புறுத்தல் – தவெக அரசு மீது குற்றச்சாட்டு
இதற்கிடையில், டிக்கெட் எடுத்தவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக, தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை உள்ளே சென்று பார்க்குமாறு தியேட்டர் நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், படம் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறுவர்களாக இருந்த நிலையில், வயது வந்தோருக்கான ‘ஏ’ (A) சான்றிதழ் பெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குள் மாணவர்களை எப்படி அனுமதிக்க முடியும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சிறுவர்கள் பார்க்க வந்த படத்திற்குப் பதிலாக ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படத்தைப் பார்க்கச் சொன்னது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், “தவெக ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் மூலம் உச்சக்கட்ட அராஜகம் அரங்கேறுகிறது” என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டினர்.

காவல்துறையினர் உடனடி விசாரணை
திரையரங்கில் பொதுமக்கள் திரண்டு தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்துத் தகவல் அறிந்த ரோந்துப் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அண்ணாசாலை கேசினோ திரையரங்கு பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.

நாடு முழுவதும் இன்று UPSC ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வு: சென்னையில் தீவிர சோதனைகளுக்குப் பின் தேர்வர்கள் அனுமதி!

MUST READ